Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை!

Federal government warns restaurant owners Decent action if this fee is collected!

Federal government warns restaurant owners Decent action if this fee is collected!

உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை!

இந்த ஆண்டு பல பொருட்களின் விலை அதிகளவு உயர்ந்து காணப்படுகிறது.விலைவாசி பெருமளவு உயர்ந்tததை கண்டித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிக்களவு உயர்ந்து காணப்படுகிறது.பெட்ரோல் டீசல் விலை உயர்வை அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்த்தனர்.மக்களுக்கு மாநிலங்கள் கொடுத்த இலவச சலுகைகள் தான் நிதி நெருக்கடிக்கு காரணம். அதனால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது என மத்திய அரசு கூறியது.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது தான் கலால் வரியை குறைத்துள்ளது.உணவகங்கள் வைத்து நடத்தும் பலர் சேவை கட்டணத்தையும் வசூலித்து வருகின்றனர்.

தற்போது இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதுபற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, உணவகங்கள் வைத்து நடத்துபவர்கள் சேவைக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். சேவை செய்யும் ஊழியர்களின் சம்பளம் வழங்க இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு சம்பளம் தர விரும்பினால் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி கொள்ளலாமே தவிர சேவை கட்டணம் என்று ஏதும் வசூல் செய்யக்கூடாது. அதேபோல உணவு பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்வதற்கான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்றும் கூறினார். உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கிய சேவை பிடித்திருந்தால் அவர்களே முன்வந்து டிப்ஸ் தருவார்கள் என்றும் தெரிவித்தார். சேவை கட்டணம் என்று வசூலிப்பது சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார். அவர் வசூலிக்கப்படும் உணவகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Exit mobile version