இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

0
135

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஏற்கனவே மக்களை அச்சுறுத்தி வந்து பின்னர் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நாடெங்கும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேலும் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் சில புதிய கட்டுப்பாடுகளை நேற்றிரவு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த கட்டுப்பாடுகள் இன்று(ஜனவரி1) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்

கொரோனா தொற்று பாதிப்பு நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து உள்ளது. எனவே நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்தி தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்றும்

மேலும் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு திணறல், உடல் வலி, சுவை உணராமை மற்றும் வாசனை இழப்பு ஆகிய அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களை அல்லது காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் சந்தேகிக்கப்படும் நபராக கருதி உடனே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.