Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Fees effective from yesterday! Southern Railway announced!

Fees effective from yesterday! Southern Railway announced!

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாகவே இருந்தது.அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசினால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.அதனால் ஆம்னி பேருந்துக்களின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது.

அப்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,தாம்பரம் ,காட்பாடி ,செங்கல்பட்டு ,அரக்கோணம் ,திருவள்ளூர் ,ஆவடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களிலும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது.ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ 10 ல்லிருந்து ரூ 20 ஆக உயர்ந்தது.

இந்த கட்டணம் உயர்வானது வருகிற 2023ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எட்டு ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 20 ல் இருந்து ரூ 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version