Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்!

பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்!

அண்மையில் சென்னை மாநகர காவல்துறையில்,மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு என்பவர் கடந்த ஜூலை 3ஆம் தேதி பணியின் போது உயிரிழந்தார்.அதேபோன்று மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ராபர்ட் என்பவர் கடந்த ஜூலை 9ம் தேதி பணியின் போது உயிரிழந்தார்.

பணியின் போது உயிரிழந்த 2 தலைமை காவல் அதிகாரிகளின் குடும்பங்களுக்கும் உதவும் பொருட்டு,உதவும் உறவுகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்களால் வாட்ஸ்ஆப்பின் மூலம் நிதி திரட்டப்பட்டது.

அந்த வகையில் சுமார் 2500 பேர் இணைந்து இரண்டு காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.இதன் மூலம் 26.25 லட்சம் நிதி உதவி திரட்டப்பட்டது.இவ்வாறு திரட்டப்பட்ட இந்த நிதி உதவியை சென்னை மாநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், தலா 13.20 லட்சம் ரூபாய்,இறந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கினார்.

Exit mobile version