குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ!
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பாலசுப்ரமணியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களையும் பெற்றார்.
அந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார். அவர் இந்த குறை தீர்ப்பு கூட்டம் தொடங்கியதிலிருந்தே மக்கள் கூறிய கோரிக்கைகளை பற்றி கவனிக்காமல் தனது செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்தார்.
மேலும் அவர் யூடியூப் சேனலில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்தார். அதுவும் கூட்டம் முடியும் வரை பார்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது அருகில் இருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் மனு அளிக்க வந்த பொது மக்கள் பெண் அதிகாரி கூட்டத்தை கவனிக்காமல் சமையல் குறிப்பு பார்த்ததை கண்டு புலம்பினார்கள். தற்போது அந்த பெண் அதிகாரி சமையல் குறிப்பு பார்த்துக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டுள்ளது.
அரசு உத்தியோகம் பலரது கனவாக உள்ளது. அது வேலைக்கு அலையும் நபர்களுக்குதான் தெரியும். ஆனால் பலர் அரசு உத்யோகத்தில் இருந்துக் கொண்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் இவ்வாறு தான் வேலை செய்கிறார்கள். இதை பார்க்கும் போது அனைவரும் இப்படி தான் இருப்பார்களோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.