இந்தியாவில் அதி நவீன ரபேல் போர் விமானங்களை இயக்க ,நாட்டிலேயே முதன்முறையாக பெண் விமானி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ஆண்டில் 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் புதியதாக 5 ரபேல் விமானங்களை பிராண்ஸ் நிறுவனம் ஒப்படைத்தது. இந்த விமானமானது சமீபத்தில் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக ராபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானியான ஷிவாங்கி சிங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர் 2017-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்து தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் முழுமையான தேர்ச்சியடைந்து 17 Squadron, golden Arrow இணைக்கப்படுவர்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்தப் பெண்மணி 2017-ஆம் ஆண்டு முதல்MiG-21 Bisons விமானங்களை இயக்கினார் என்றும் மேலும் ராஜஸ்தான் பிக் கமெண்டர் அபிநாத் உடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே இருந்துள்ளதாக அந்தப்பெண் கூறியதும், தற்பொழுது பெண் ஷாங்கி சிங்குக்கு அந்த ஆசையை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். மேலும் இவர் இணைந்ததற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.