பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாய்ந்தது நடவடிக்கை… சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

0
119
police

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி.யை தன்னுடைய காரில் ஏற்றிச் சென்ற சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் கண்டுகொள்ளப்படாத இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதானதை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதோடு, அவரை விசாரிக்கவும் கூடுதல்தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்தது.

மேலும் பெண் எஸ்.பி-யை புகார் கொடுக்கவிடாமல் தொல்லை செய்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை சஸ்பெண்ட் செய்ததோடு, அவருடன் பணியாற்றிய அனைத்து காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர்.

சிறப்பு டிஜிபியிடம் பல கட்ட விசாரணைகளை நடத்திய சிபிசிஐடி கடந்த 16ம் தேதி சீலிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி நேற்றிரவு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.