Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அந்த பெண் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர்  கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ”1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, “டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்” என்றும்தெரிவித்துள்ளார்.

இந்த பெண் எழுத்தாளரின் பாலியல் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:- கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்”என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version