கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து! வேளாண்துறை எச்சரிக்கை!

0
136
Fertilizer

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளி சந்தை கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. விவசாயிகள் சங்கத்தினரும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் வேளாண்துறை இயக்குநர் தெட்சிணா மூர்த்தி, மாவட்ட ஆட்சியருடன் சென்று குறுவை சாகுபடி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஜூன்12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால், காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சியில் தொடங்கியிருப்பதாகக் கூறினார்.

விதைகள், உரங்கள் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.