Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்! மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார்!!

#image_title

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக். மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார்.
காயம் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வந்த சிறுவனுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு காவல் துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வு தெலுங்கான மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிரவீன் என்ற 7 வயதுடைய சிறுவன் தலையில் அடிபட்டு காயத்துடன் மருத்துவமனை வந்துள்ளார். சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து வைத்து தையல் போடாமல் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் Fevi kwik பசையை போட்டு ஒட்டி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த சிறுவனை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவைச் சிகிச்சை செய்து Fevi Kwik பசை அகற்றப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மருத்துவரின் மீதும் மருத்துவமனை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Exit mobile version