Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுக்கடையில் மர்ம வேலை பார்க்க வந்த புள்ளிங்கோ : பூட்டை தொட்டதும் பூதம் கிளம்பியதால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது விருக்கல்பட்டி கிராமம். உடுமலைப்பேட்டை நகரை விட்டு வெளியில் அமைந்துள்ளது இந்த விருக்கல்பட்டி கிராமம்.

இந்த கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த மதுக்கடை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிய இருந்துள்ளது.

இதற்கிடையில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வந்தது. மேலும் சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் போதைக்காக கண்டதையும் குடித்து இறக்கும் சம்பவங்களும் பலரை வருத்தப்பட செய்தது.

இந்த நிலையில் விருக்கல்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு கொள்ளையடித்தால் அவற்றை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கலாம் என முடிவு செய்தனர்.

அந்த மர்ம கும்பல் ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இரவு வேளையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். மதுக்கடையை கொள்ளையடிக்க சுவற்றை தொலையட்டும் பூட்டை உடைத்து முயற்சி செய்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மதுக்கடையில் காலி மது பாட்டில்கள் கூட இல்லாமல் தேடிச்சென்ற புள்ளிங்கோ டென்ஷன் ஆகியுள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஊருக்கு வெளியே இருக்கும் மதுக்கடைகளில் உள்ள பாட்டில்களை பாதுகாப்பான இடத்திற்கு அரசு அதிகாரிகளால் மாற்றப்பட்டுள்ளது.

இது தெரியாமல் வெறித்தனமாக பூட்டை உடைத்த மர்ம கும்பலை தற்போது போலிஸ் வலை வீசி தேடி வருகிறது.

Exit mobile version