கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

0
114

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

 

கிராமங்களை ஆப்டிக்கல் கேபிள் மூலம்
நவீனமயமாக்கப்படுவதால் ஆயிரம் நாட்களில் 20 லட்சம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும்.மத்திய அரசின் புதிய திட்டம்.

இந்தத் திட்டத்தை குறித்து பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கூறினார்.இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

கிராமங்களை ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் டிஜிட்டல் மயமாக்க படுவதால்,கிராம மக்கள்,அரசு அலுவலகங்கள் போன்றவைகளுக்காக நகரங்களுக்குச் செல்ல தேவை இல்லை.

இந்த திட்டத்தின் மூலம்1.5 லட்சம் கிராமங்களில்ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.ஆயிரம் நாட்களில் மீதமுள்ள 4.5 லட்சம் கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணி நிறைவடையும்.இதனால் அனைத்து கிராமங்களும் நகர மயமாக்கப்படும்.

ஆப்டிகல் பைபர் கேபிள் வருவதால்,கிராமங்களின் இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும்.

இதுமட்டுமின்றி கிராமங்களில் தயாரிக்கும் பொருட்களை தாங்களே இ-காமர்ஸ் மூலம் விற்க முடியும்.மேலும் கிராமங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைக்கு அரசின் மின் சந்தையில் சேர்க்க அரசு அவர்களை அனுமதிக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள்:

கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வந்தவுடன் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுவான சேவை மையம் அமைக்கப்படும்.

இந்த பொது சேவை மையத்தில் பணிபுரிவதற்காக கிராமங்களிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து நபர்களுக்கு வேலை அளிக்கப்படும்.அதன்படி 4.5 லட்சம் கிராமத்தில் 20 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.

இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்கள் வேலைக்கு நகரத்தை நோக்கி செல்ல வேண்டியதில்லை.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம அளவிலும் தொழில்முனைவோர் நியமிக்கப்படுவர்.

இந்தத் தொழில் முனைவோர்கள் மூலம் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள்,தானிய வகைகள் போன்ற விவசாய பொருட்கள் வீட்டிலேயே விற்க ஏற்பாடு செய்வார்கள்.
இதன்மூலம் விவசாயிகளுக்கும் பெரும் நன்மை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.