Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்!

#image_title

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்!

ஒருவருக்கொருவர் கற்களை கொண்டும் கவட்டை வில்லை கொண்டும் தாக்கியதில் 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது.

சிவகங்கை பழமலை நகர் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய தினேஷ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை அதே பகுதியில் வசிக்கக்கூடிய சிலர் கேலி செய்ததாக இருதரப்பிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு தரப்பினருக்கு ஆதரவாக மதுரையிலிருந்து வந்த சிலரும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் இந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த பெரியவர்கள் சிலர் இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்த நிலையில் மீண்டும் இரவு நேரத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் கற்களைக் கொண்டும் கவட்டை வில்லை கொண்டும் தாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இதில் ஐந்து பெண்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் கவட்டை வில்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த இளைஞர் ஒருவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித், ரஞ்சித் குமார், சிவா, சிவரஞ்சித், சுந்தரபாண்டி இந்த ஐந்து நபர்களை சிவகங்கை நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளது.

காயம் அடைந்தவர்களும் அவர்களின் ஒரு உறவினர்களும் 100க்கும் அதிகமானோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடி உள்ளனர் நரிக்குறவர் இன மக்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version