Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலீசை பாய்ந்து பாய்ந்து அடித்த இளைஞர்கள்! தென்னை மட்டையில் போலீஸுக்கு அடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர்கள் 6 பேரும் போலீசாரை தென்னை மட்டையால் தாக்கிய சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபகாலமாகவே பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கரமான தாக்குதல்கள் தொடங்கி வருகின்றனர். பொதுமக்கள் போலீசிடம் அவதூறாக நடந்துகொள்வது, அதேபோல் போலீசார் மக்களிடம் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொண்ட அடித்தே கொல்வது போன்ற எக்கச்சக்கமான தாக்குதல்கள் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

 

இப்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு பகுதியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வத்தலகுண்டு அருகே சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் இளைஞர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வந்துள்ளனர்.

 

உசிலம்பட்டி சாலையில் அங்கிருந்த சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு தடுப்பதற்காக போடப்பட்ட பரிகாட் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதை பார்த்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

 

எதிர்பாராத விதமாக போலீசுக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினருக்கும் சண்டை வரை கொண்டு போய் உள்ளது.

 

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு உள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர்கள் அருகில் உள்ள தென்னை மட்டையை எடுத்து போலீசாரை தாக்கி உள்ளனர்.

 

போலீசார் அந்த இளைஞர்களுடன் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்த பிறகு தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். முத்துமாணிக்கம் ரஞ்சித் காளிதாஸ் என்ற மூன்று இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

போலீசும் இளைஞர்களும் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகள் இணையதளத்தில் பரவி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இதேபோல் மளிகை கடை வியாபாரி முருகேசன் இறப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் பொதுமக்கள் போலீசார் பொதுமக்கள்க்கிடையே நிறைய தாக்குதல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

 

Exit mobile version