நாம் படிக்கும் போது எல்லாம் சண்டை என்றால் குச்சிகளை வைத்து சண்டை போடுவோம். ஆனால் இப்போதெல்லாம் அறுவா,கத்தி, துப்பாக்கி, பிளேடு போன்ற பொருளை வைத்து தான் சண்டை போடுகிறார்கள். நாடு எங்கே போகிறது. அப்படி ஒரு சம்பவமாக சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டிருந்தனர்.
அந்த பேருந்தில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருகட்டத்தில் ஒரு தரப்பு மாணவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்து மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர்.
பேருந்தில் நடந்த சண்டையில், பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
அங்கு நடந்த சம்பவம் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர்.
இந்த மோதலில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களின் இந்த மோசமான செயல்களை கண்டித்து காவல்துறை சார்பில் பல கல்லூரி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ரூட் தல எனப்படும் 90 மாணவர்கள் கண்டுபிடித்து காவல்துறையினர் அழைத்து வரப்பட்டனர்.
காவல் துறையினர் இதற்கு தீர்வாக மாணவர்கள் அனைவரும் இனி எந்தவித வன்முறையிலும் ஈடுபட மாட்டோம், எங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் என ஒரே குரலாக உறுதிமொழி எடுத்தனர்.
சட்டத்தை மீறி எந்த ஒரு தவறு செய்தாலும் அவர்களை கைதுசெய்ய அம்பத்தூர் துணை ஆணையருக்கு அதிகாரம் உண்டு என கைப்பட பத்திரம் எழுதிக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படிக்கும் போதே இப்படி அருவாள், கத்தி, கம்பு, வெட்டருவா, போன்ற பொருள் வைத்து கொண்டு திரிந்தால் இந்த இளைஞர் சமூகம் எப்படி நல்ல நிலையை அடையும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் அனைவரும் இது போன்ற மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.