Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார். முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பவானி ஸ்ரீயும் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக தயாராகி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது, படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை பயிற்சியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Exit mobile version