இந்திய திரைப்பட விழாவில் வெளியிட போகும் தமிழ் படமாக “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் தேர்வாகியுள்ளது. நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் இந்திய திரைப்பட விழா நடைபெற உள்ளது.
முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது. மேலும் இவ்விழாவில் 25 படங்கள் வெளியிடப்பட உள்ள நிலையில் அதில் தமிழ் படமும் ஒன்று என்பது தமிழ் திரையுலகிற்கு பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.
தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் தொடர்ந்து தெலுங்கில் நடிகை நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன கத காது என்ற படமும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து மலையாளத்தில் மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன. அவை, அமலா பால் – ஆசிப் அலியின் லெவல் கிராஸ், மம்மூட்டியின் பிரம்மயுகம், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் .இதேபோல ஆவண குறும்படங்களும் 20 படங்கள் தேர்வாகியுள்ளன.
வணிக சினிமா பிரிவில் 12த் பெயில், மஞ்சுமெல் பாய்ஸ், கல்கி 2898 ஏடி, ஸ்வார்கரத், கர்கானு ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.
55 ஆவது வருடமாக கொண்டாடப்படும் இந்திய திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இடம்பெற்றுள்ளது.கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.