1987 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, செந்தாமரை, சரண்ராஜ் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முக்கியமாக இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் கதை சுருக்கமானது :-
கிராமத்தில் டாக்டராக இருக்கும் நிழல்கள் ரவி, பஞ்சாயத்து தலைவராக இருக்கும் செந்தாமரை அடித்த ஒரு ஆளுக்கு வைத்தியம் பார்க்க, அவரை கொன்றுவிட்டு பலியை நிழல்கள் ரவி மீது போட்டுவிடுவார். இதனால் அவர் ஜெயிலுக்கு போயிவிடும் நிலையில், இதற்கு நியாயம் கேட்டு ராதிகா குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் போக, அந்த போலீஸ் குழந்தையை கொன்றுவிடுவார். இறந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ராதிகா அமைச்சரிடம் செல்வார்.
அமைச்சர் சரண்ராஜ் நல்லவர் போல் நடித்து குழந்தையின் உடலை புதைத்துவிட்டு, ராதிகாவை பலாத்காரம் செய்துவிடுவார். இதை அறிந்த எம்.எல்.ஏ ரவிசந்திரனின் மனைவியான ஸ்ரீவித்யா, இந்த கேஸை கையில் எடுத்துக்கொண்டு வதாடுவார். இதில் ராதிகா, குழந்தையை கொன்றுவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முத்திரை குத்தி சிறைக்கு அனுப்பப்படுவார்.இதன் பிறகு என்ன நிகழும் என்பதே இப்படத்தின் கதை.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இப்படம் வெளிவந்ததால் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. தமக்கேதேனும் பிரச்சனை வந்துவிடும் என பயந்த எஸ் கே சி அவர்கள் திமுகவில் இணைந்து கொள்ள முடிவு செய்யும் பொழுது எம்ஜிஆர் இடமிருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து இவர் கலைஞரிடம் பேசிய பொழுது பயமின்றி சென்று வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று எம்ஜிஆரை காண சென்ற எஸ் ஏ சி அவர்கள், அவருக்கு பின்னால் வந்த அனைவரும் எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு செல்ல, இவருக்கு அழைப்பு வரவில்லை. இதனால் பிரச்னை பெரிதாகவும் என்று நினைத்த எஸ்.ஏ.சி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க, எம்.ஜி.ஆர் அப்போது அவரை அழைத்துள்ளார்.
உள்ளே சென்ற இயக்குனர் எஸ் ஏ சி யிடம் எம்ஜிஆர் அவர்கள் உங்களுடைய நீதிக்கு தண்டனை படுத்தினை ஐந்து முறை பார்த்து விட்டேன். இது போன்ற நல்ல படங்கள் வெளிவர வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர் கூறியது தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் ஆழ்மனதில் பயத்தோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார் எஸ் ஏ சிஅவர்கள். மேலும் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் ஒரு ஆண்டிற்கு இரண்டு படங்கள் வீதம் எனக்கு நீங்கள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், இந்த விஷயம் நடந்து சிறிது காலங்களிலேயே எம்ஜிஆர் அவர்கள் இறைவனடி சேர, எஸ் ஏ சி அவர்களுக்கு இந்த வாய்ப்பினை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விட்டது.