Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! 

FINAL WORKS COMPLETED!! Indian 2 Movie Major Update!!

FINAL WORKS COMPLETED!! Indian 2 Movie Major Update!!

நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், மாரிமுத்து, சமுத்திரக்கனி, மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, மறைந்த நடிகர் விவேக், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தில் இது வரை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்திருந்த காட்சிகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் டப்பிங்கை முடித்துள்ளார். மேலும் மற்ற நடிகர்களும் அவர்களுக்கான டப்பிங்கை செய்து வருகின்றனர். இன்னும் சிறிது காட்சிகளே படமாக்க வேண்டும் என்பதால் இந்த காட்சிகளை சென்னையில் படமாக்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியட இயக்குநர் சங்கர் அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
Exit mobile version