குளத்தில் தவறி விழுந்துவிட்டார் இறுதிச்சுற்று பாக்ஸர் ரித்திகா சிங்!
நடிகை ரித்திகா சிங் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் பாக்ஸராக இருப்பதால் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான மாதவன் நடித்த “இறுதிசுற்று” என்ற திரைபடத்தில் பாக்ஸராக அறிமுகமானார்.ரித்திகா சிங் அதே மாதிரி பாத்திரம் என்பதால் 100% அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தினார்.அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
ஒரே படத்தின் மூலம் உலக அளவில் வேறு லெவலுக்குச் சென்றுவிட்டார் ரித்திகா சிங்.தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரித்திகா சிங் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் இருக்கிறார்கள்.இந்த திரைப்படத்தில் இவரது செல்ல பெயரான ‘நூடுல்ஸ் மண்ட’ என்பது இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாகத் தான் அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கும் ஒரு செல்லக் குற்றச்சாட்டு இருக்கிறது அதாவது என்ன அந்த செல்ல குற்றச்சாட்டு என்னவென்றால் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்ற செல்லமான குற்றச்சாட்டு தான்.
இந்நிலையில் பாக்சர் ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து விட்டார்.தவறி விழுந்தாலும் அதை நினைவுபடுத்திச் சிரிப்பதற்காக அதை வீடியோவாக எடுக்க சொல்லியிருந்தார் அந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.