இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்டும் வகையில் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்ட தொகுப்பு அளிக்கவிருப்பதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக சுயசார்பு திட்டம் என்ற பெயரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவர் அறிவித்த அறிவிப்புகளுக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. எதிர்கட்சி உட்பட சில கட்சிகள் இந்த திட்டங்களால் மக்கள் நேரடியாக எந்த பயனையும் அடைய போவதில்லை என்றும், மக்களுக்கு நேரடியாக பணம் சென்றடைந்தால் மட்டுமே அவர்கள் தற்போதுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வார்கள் என்று, இதனால் நேரடியாக அவர்கள் வங்கி கணக்கிற்கே மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்க்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “மக்களுக்கு நேரடியாக பணம் அளிப்பதன் மூலம் பொருளாதார சரிவை மேம்படுத்த முடியாது. வங்கிகள் மற்றும் தொழில்துறைகள் மூலம் பணம் அளிக்கும்போது பொருளாதார நிலை உயரும்” என தெரிவித்துள்ளார்.