நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

0
196
Financial Institution Fraud!! Youth suicide!!

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர்  சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார்.

இவர் IFS என்ற  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் வங்கி ரூ. 26 லட்சம் முதலீடு செய்துள்ளார்.  இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கிற ஏஜென்ட் மூலம் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் IFS நிதி நிறுவனம் மூடப்பட்டது. அதற்கு பிறகு பிரசாத்திற்கு பணம் வரவில்லை.  கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர, 12 லட்சம் ரூபாய் வரை வட்டி கொடுத்து கடன் பிரச்சனைகளை தவிர்த்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் இன்று காலை வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்ட அவரது குடும்பத்தார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து குடியாத்தம் போலீசார் பிரசாத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசாத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், IFS நிறுவன ஏஜென்ட் வெங்கடேசன் என்பவர் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி 26 லட்சம் பணம் கொடுத்து நான் ஏமாந்துவிட்டேன் எனவும், மூன்று நாட்களுக்கு முன்னர் அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நான் அதிக வட்டிக்கி கடன் வாங்கித்தான் முதலீடு செய்தேன்.

கடன் கொடுத்தோர் திரும்ப கேட்க, என்னால் கொடுக்க முடியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் 12 லட்சம் வரையில் வட்டி கொடுத்து அதிக கடன் சுமையில் நானே மாட்டிக்கொண்டேன். என் சாவுக்கு காரணம் IFS நிறுவனம் மட்டுமே. அதன் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கபட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.