Goldrate:தங்க கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மோசடி செய்வதால் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வால், தங்கத்தின் மீதான கடன்களும் அதிகரித்துள்ளது. தங்க கடன் வளர்ச்சி விகிதமும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை அறிமுகபடுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நோக்கம் தங்க கடன் விஷியத்தில் வழிகாட்டுதல்களை சீராக பயன்படுத்துவது மற்றும் அதை உறுதி செய்வதும் கடன் வாங்குவோர் மீதான வட்டி சுமையை குறைப்பதும் ஆகும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால் எதிர் காலங்களில் தங்க நகைக் கடன் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வங்கிகள் மற்றும் NBFC போன்ற வங்கிகளில் தங்க நகை கடன் வளர்ச்சி குறையும் என்றும் கிரிசில் இயக்குனர் மாளவிகா போடிகா கூறியுள்ளார். மேலும் தங்க நகை கடன் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் தங்க நகை கடன் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி சில குறைபாடுகளை கூறியுள்ளது.தங்க நகை கடன் வழங்குபவர்கள் தங்கள் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றி சரியான நேரத்தில் தங்க கடனை செலுத்த வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனால் தங்க கடன் வணிக வளர்ச்சி குறையும் என அனைவரும் நினைக்கிறார்கள்.
வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களும் காலாவதியான தங்க நகை கடனை சரியாக கணக்கு பார்க்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்ததால் மக்கள் கடன் அதிகமாக வாங்குகின்றனர். இதில் பல நிதி நிறுவனங்கள் மோசடி செய்வதால் ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.