Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்!! இப்படி பிரிட்ஜை வைத்தால் கட்டாயம் வெடிக்கும்!!

find-out-if-you-put-a-bridge-like-this-it-will-explode

find-out-if-you-put-a-bridge-like-this-it-will-explodefind-out-if-you-put-a-bridge-like-this-it-will-explode

நாம் காய்கறிகள் மற்றும் பழங்கள் என வாங்கினாலே ஒரு நாளைக்கு மட்டும் வாங்காமல் ஒரு வாரத்திற்கு என வாங்கி அதனை பாதுகாப்பாகவும், அழுகி போகாமலும் இருக்க பிரிட்ஜின் உள்ளே வைக்கிறோம். அதுமட்டுமன்றி பால், முட்டை, இறைச்சி மற்றும் மாவு வகைகள் போன்ற எல்லாவற்றையும் நாம் பிரிட்ஜின் உள்ளே தான் வைக்கிறோம்.

அவ்வாறு நாம் தினமும் உபயோகப்படுத்தக்கூடிய பிரிட்ஜை பராமரிப்பது எப்படி என்று பலரும் தெரியாமல் இருக்கிறோம். இதனால்தான் ஃபிரிட்ஜ் ஆனது வெடிப்பது அல்லது ஃப்ரிட்ஜினால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது போன்ற ஆபத்தான செயல்கள் நடக்கின்றன.

நம் வீட்டில் உள்ள பிரிட்ஜின் பிரீசரில் உள்ள ஐஸ் கட்டிகளை கத்தியாலோ அல்லது கூர்மையான பொருட்களைக் கொண்டு குத்தியோ எடுக்கிறோம். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அந்த கூர்மையான பொருட்கள் ஃப்ரீசரை சேதமடைய செய்து கேஸ் ஆனது கசிய கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். அவ்வாறு கேஸ் ஆனது கசிந்தால் நமது உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் பிரிட்ஜ் வெடிப்பதற்கு காரணமாக அமைகிறது. நமது வீட்டில் உள்ள பிரிட்ஜை ஜன்னலுக்கு அருகிலோ அல்லது காற்றோட்டம் அதிகம் உள்ள இடத்திலோ தான் வைக்க வேண்டும். ஏனென்றால் ஃப்ரிட்ஜ் ஆனது அதிக குளிர்ச்சியாக இருப்பதால் அதிக வெப்பத்தை வெளியேற்றும். அவ்வாறு வெளியேற்றக்கூடிய வெப்பமானது வெளியேறுவதற்கான வாய்ப்பினை நாம் அமைத்து தர வேண்டும்.

அனைத்து பிரிட்ஜ்களிலும் பின்புறமாக உள்ள கம்பிகளை நாம் பார்த்திருப்போம். அது எதற்கு என்றால், கீழே உள்ள கம்ப்ரஸரில் இருந்து தான் கேஸ் ஆனது பிரிட்ஜ்ஜிற்கு வருகிறது. அவ்வாறு வரக்கூடிய கேஸ் ஆனது அந்த கம்பியின் வழியாகத்தான் வருகிறது. எனவே பிரிட்ஜை சுவற்றில் இருந்து ஒரு அடி யாவது தள்ளி இருக்குமாறு வைக்க வேண்டும். பிரிட்ஜின் கம்பிகள் சுவற்றை ஒட்டி உள்ளவாறு வைக்க கூடாது. அவ்வாறு ஒட்டி இருந்தால் கேஸ் ஆனது பரவுவதை தடுத்து ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

நமது வீட்டை சுத்தம் செய்யும் பொழுதோ அல்லது வீடு மாறும் பொழுதோ ஃப்ரிட்ஜை நகர்த்துவோம். அவ்வாறு நகர்த்துவதற்கு ஒரு 20 நிமிடங்களுக்கு முன்பே ஃப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்து அதன் பிளக்கை பிடுங்கி விட வேண்டும்.
பிரிட்ஜின் பின்புறம் உள்ள கழிவுநீர் தேங்க கூடிய பெட்டியை அவ்வபோது தண்ணீர் நிரம்பி வழியாதவாறு முன்பே சுத்தம் செய்ய வேண்டும்.

அவ்வாறு கழிவுநீர் நிரம்பி கம்பிரஷர் மீது வழிந்தால் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு நமது வீட்டின் ஃபிரிட்ஜ்ஜை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு ஏதேனும் பிரச்சனை நமது வீட்டில் உபயோகிக்க கூடிய மற்ற மின்சார பொருட்களில் இருந்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க RCCB யை பொருத்தலாம்.

Exit mobile version