தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

0
83

உங்களுக்கு வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.

 

*வயிற்றுப்புண்

 

சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து பின்னர் பொடித்து மோரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

 

அகத்தி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.

 

*குமட்டல்

 

சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊறவைத்து நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகி வந்தால் குமட்டல் பிரச்சனை சரியாகும்.

 

வெற்றிலை காம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் குமட்டல் நிற்கும்.இஞ்சி சாற்றில் தேன் கலந்து பருகினால் குமட்டல் நிற்கும்.

 

*வயிற்று கடுப்பு

 

இலவங்கப்பட்டையை அரைத்து சூடான நீரில் கலந்து பருகி வந்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

 

பிஞ்சு தென்னங்காய் மட்டையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

 

வெந்தயத்தை பொடியாக்கி தயிரில் கலந்து குடித்து வந்தால் வயிறு கடுப்பு குணமாகும்.

 

*வயிற்று பொருமல்

 

ஒரு வெற்றிலை மற்றும் கால் தேக்கரண்டி ஓமத்தை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குணமாகும்.

 

*பேதி

 

மாங்கொட்டை பருப்பை வறுத்து பொடியாக்கி பாலில் கலந்து பருகி வந்தால் பேதி குணமாகும்.

 

கொய்யா வேரை சுத்தம் செய்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் பேதி நிற்கும்.

 

*வயிற்று புழு

 

வேப்ப இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தும் நீங்கும்.

 

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் மூன்று துளி விளக்கெண்ணெய் கலந்து பருகினால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தும் இறந்து வெளியேறிவிடும்.

 

*வயிறு உபாதை

 

வர மிளகாய்,சீரகம் மற்றும் உப்பை எண்ணெயில் வறுத்து பொடித்து சூடான சாதத்தில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.

 

*மலச்சிக்கல்

 

ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.