Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டிற்கு பூரான் வருகை தருவது நல்லதா? கெட்டதா?

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டிற்கு பூரான் வருகை தருவது நல்லதா? கெட்டதா?

நம் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு இடமாக இருந்தால் அங்கு விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கும். நம் வீட்டை தேடி காகம், சிட்டுக் குருவி, பட்டாம் பூச்சி உள்ளிட்ட பறவைகள் வருகை தந்தால் நம் இல்லம் இனிமையாக, சுத்தமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை நம் வீட்டிற்கு ஓணான், தேள், பூரான், பாம்பு,அரணை உள்ளிட்ட உயிரினங்கள் வருகை தந்தால் நம் இல்லம் சுத்தமாக இல்லை, நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லை என்பதை குறிக்கிறது.

அதேபோல் நம் வீட்டு குளியலறையில் அடிக்கடி பூரான் வருகை இருக்கிறது என்றால் ஆன்மீகப் படி அவை நல்லதா? கெட்டதா என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். முதலில் நம் வீடு, பாத்ரூம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி பூரான் வரக் காரணம் நம் வீட்டை சுற்றி அசுத்தமாக இருபது தான். அதிக ஈரம்,சேறு, சாக்கடை, குப்பை உள்ளிட்டவைகள் இருந்தால் அனைத்து விஷ ஜந்துக்களும் நம் வீட்டிற்கு படையெடுக்கும். இந்த விஷ ஜந்துக்களில் ஒன்றான பூரான் நம் வீடு, குளியலறை மற்றும் சுற்றம் அனைத்தும் தூய்மையாக இருந்தும் வருகிறது என்றால் நிச்சயம் அவை நமக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

ஆன்மீகப் படி பார்த்தால் நம் வீடு சுத்தமாக இருந்தும் பூரான் வருகிறது என்றால் நம்முடைய வீட்டிற்கு கஷ்டம் வரும், அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போகும், நிம்மதி இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்படும்.

எனவே குளியலறை, கிட்சன், வீடு என்று அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவது அவசியம் ஆகும். பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கான சமயத்தில் ஏற்படக் கூடிய வடைக்கு பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்கு வருகை தரும் நிலை ஏற்பட்டு விடும். வீட்டை துடைக்கும் பொழுது தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து துடைத்தால் விஷ ஜந்துக்கள் வீட்டை நோக்கி படையெடுக்காது. பெண்கள் குளிக்கும் பொழுது முகத்திற்கு சிறிதளவு மஞ்சள் தூள் பூசி குளிப்பதன் மூலம் பாத்ரூமில் மஞ்சள் வாசனை ஏற்படும். இதனால் விஷ ஜந்துக்கள் வருகை இருக்காது.

Exit mobile version