தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?
கோயில் கோபுர தரிசனத்தின் நன்மைகள்…
எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும்.
ராஜகோபுரம் இல்லாத கோயில்களில் வாசல் படிகளை தொட்டு வணங்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கடவுளின் நேர்மறை ஆற்றல், மின் காந்த அலைகள் நம் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
கொடி மரத்தையும், நந்தி தேவரையும் முதலில் வணங்க மறவாதீர்கள். வழிபாடு முடித்த பிறகு கோயிலில் அமைதியான இடத்தில் அமைர்ந்து இறையருளை பெற்று நிறைவாக செல்ல வேண்டும்.
கோயிலில் மற்றவர்கள் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?
கோயிலில் யார் தீபம் ஏற்றினாலும் ஒன்று தான். சுவாமி சன்னதியில் தீபம் ஏற்ற நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. ஒருவர் ஏற்றிய விளக்கில் இருந்து நீங்கள் தீபம் ஏற்றும் பொழுது அது உங்களுக்கு எந்த ஒரு புண்ணியத்தையும் தராது. பாவத்தையும் போக்காது. ஒருவர் ஏற்றிய தீபம் அவருக்கு பாவம் புண்ணியம் அதில் நீங்கள் பகிர முடியாது.
இனி மற்றவர்கள் ஏற்றிய அகல் விளக்குகளில் நீங்கள் தீபம் ஏற்றக் கூடாது. கோயிலில் தீபம் ஏற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் தீபம் ஏற்றுங்கள்.