இரவு நேரத்தில் கை குடைச்சல் பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.கை மற்றும் கால்களில் ஏற்படும் குடைச்சலால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.இந்த குடைச்சல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
கை கால் குடைச்சல் எதனால் ஏற்படுகிறது?
நரம்பு பாதிப்பு,இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்,கால்சியம் சத்து குறைபாடு,ஹார்மோன் குறைபாடு,வைட்டமின் பி12 குறைபாடு போன்ற காரணங்களால் கை கால் குடைச்சல் ஏற்படுகிறது.அதேபோல் முதுகு தண்டு வட பாதிப்பு இருந்தாலும் கை கால் குடைச்சல் ஏற்படும்.
கை கால் குடைச்சலை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:
1)சீரகம் – 50 கிராம்
2)வெல்லம் – 25 கிராம்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1.முதலில் 50 கிராம் சீரகத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
2.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து தூளாக்கி கொள்ளவும்.அதேபோல் 25 கிராம் வெல்லத்தை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3.பின்னர் இந்த இரண்டு பொருட்களையும் தட்டில் கொட்டி நன்றாக ஆறவிட்டு ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளவும்.
4.அதன் பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த சீரகம் மற்றும் வெல்லக் கலவை ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.
5.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் பாதி எலுமிச்சை சாறை சீரக வெல்லக் கலவையில் பிழிந்து சாப்பிட்டால் கை கால் குடிச்சல் சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் பால் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:
1.ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
2.பிறகு இந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கை கால் குடைச்சல் சரியாகும்.