Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?

1)கிழக்கு

இந்திர திசையாகிய கிழக்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

2)மேற்கு

வருண திசையாகிய மேற்கில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும். இந்த திசையில் தலை வைத்து உறங்கினால் பிரபல யோகமும், கீர்த்தியும் உண்டாகும்.

3)வடக்கு

குபேர திசையாகிய வடக்கில் தலைவைத்து உறங்கினால் வியாதிகள் உண்டாகும். வடக்கே தலை வைத்து படுப்பவர் காலையில் எமன் மூளை நோக்கி விழிப்பார்கள். வீட்டில் பணக் கஷ்டம், கண் திருஷ்டி ஏற்படும். இவ்வாறு உறங்கினால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். இவ்வாறு செய்வதால் நல்ல நிம்மதியற்ற தூக்கம் தான் வரும். எப்பொழுதும் உடல் சோர்வாக இருப்பீர்கள்.

4)தெற்கு

இமயம் திசையாகிய தெற்கில் தலை வைத்து உறங்கினால் ஆயுள் கூடும். இந்த திசை மிகச் சிறந்த திசையாக கருதப்படுகிறது. இவ்வாறு தூங்கினால் உங்களுக்கு புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வரும். அது மட்டும் இன்றி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

Exit mobile version