தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..?

0
327
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..?

உங்களை எந்த வகை பாம்பு கடிக்கிறதோ அந்த பாம்பின் வகையை அறிந்திருக்க வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அவற்றை அறிந்திருப்பது அவசியம் ஆகும். இந்தியாவில் நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்டவைகள் தான் மரணத்தை ஏற்படுத்தும் வகைகளாக இருக்கிறது.

பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமான கயிறு போட்டு காட்டுவதால் எந்த பயனும் இல்லை. இவ்வாறு செய்வதினால் அந்த நஞ்சு கடிபட்ட இடத்தில் அதிகம் தேங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. பாம்பு கடித்த இடத்தில் உள்ள இரத்தத்தை வாய் வைத்து உறிந்து விஷத்தை முறிக்கிறேன் என்று படத்தில் வருவது போல் ஒருபோதும் செய்யக் கூடாது.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்..?

பாம்பு கடித்த நபரை அந்த இடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவரை பதட்டப்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் மோதிரம், காப்பு, மோதிரம், வளையல் அணிந்துருந்தால் அதை உடனே அகற்றிவிட வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் பேண்டேஜ் போட்டால் விஷம் மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும்.

பாம்பு கடிபட்ட நபர்கள் உடலை அசைக்காமல்.

மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட நபரை இடது பக்கம் ரெக்கவரி பொசிஷனில் படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாம்பு கடித்த நபரை குணப்படுத்திவிட முடியும்.