சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

0
151

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி அழகாகவும், தூய்மையாகவும், வைத்திருக்க மாநகராட்சி சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளீன் சென்னை என்ற பெயரில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் பணியும் நடந்து வருகிறது அதோடு வாகன கழிவுகள் மூலமாக உலக சிற்பங்கள் செய்து பொதுமக்களின் பார்வைக்கு பொது இடங்களில் வைக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிக்கையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படும் கட்டடம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் பகுதியில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன் பாட்டு மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களால் குறைந்த அளவில் ஏற்படுத்தப்படும் கட்டட கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பாக 15 தொகுதிகள் கண்டறியப்படுகின்றன. பொதுமக்கள் கட்டடம் மற்றும் இடிபட்டு கழிவுகளை அந்த பகுதிகளில் மட்டுமே சேகரிக்க வேண்டும். இதனை மீறும் நபர்களின் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019 இப்படி பொது இடங்களில் ஒரு டன் அளவு குறைவாக கட்டட கழிவுகளை கொடுப்பவர்கள் மீது 2000 ரூபாயும், ஒரு டன் அளவிற்கு அதிகமாக கட்டட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை தூய்மையாக வைத்திருக்கும் விதத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.