Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.500 இலிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்ட அபராதம்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!

Fine increased from Rs.500 to Rs.5000!! A dramatic decision by the Transport Department!!

Fine increased from Rs.500 to Rs.5000!! A dramatic decision by the Transport Department!!

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மார்ச் 1 2025 முதல் உயர்த்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் உடைய இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் அபராதங்கள் உயர்த்தப்பட்ட பொழுதிலும் மக்கள் தங்களுடைய பயணங்களின் பொழுது கவனக்குறைவாக இருப்பதும் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுதல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறுவதால் அவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு இது போன்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் போக்குவரத்து துறை சார்ந்து அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய போக்குவரத்து விதிகளின் பெயரில் போக்குவரத்து துறையின் அபராதங்கள் ஆனது பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிலும் சிலவற்றிற்கு 25000 ரூபாய் வரை அபராதங்கள் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அபராத தொகையும் அதற்கான விவரங்களும் :-

✓ குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் – 10,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மத சிறை தண்டனை. குற்றங்கள் தொடரும் பட்சத்தில் அதற்கான தண்டனைகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்கள் – 1000 ரூபாய் அபராத தொகை மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் அபாயம்

✓ ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குபவர்கள் – 5000 ரூபாய் அபராதம்

✓ இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குபவர்கள் – 2000 ரூபாய் அபராதம். மீண்டும் மீண்டும் இவை தொடர்ந்தால் அபராதம் இரட்டிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

✓ மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு – 10,000 ரூபாய் அபராதம்

✓ இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்தால் – 1000 ரூபாய் அபராதம்

✓ நான்கு சக்கர வாகனத்தை கவனக்குறைவாக இயக்கி சிக்கினால் – 5000 ரூபாய் அபராதம்

✓ அவசரகால வாகனங்கள் மற்றும் பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் வாகனங்களை இயக்கினால் – 10000 ரூபாய் அபராதம்

✓ ட்ராபிக் சிக்னல்களை மதிக்காமல் சென்றால் –
5000 அபராதம்

✓ வாகனத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்பட்டால் – 20000 ரூபாய் அபராதம்

✓ 18 வயதிற்கு கீழ் இருக்கக்கூடியவர்கள் வாகனங்களை இயக்கினால் – 25000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version