Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! தமிழக அரசின் செய்தியால் நிம்மதி அடைந்த மக்கள்!

நோய்த்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், உள்ளிட்டவை செயல்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

அந்த விதத்தில், பிப்ரவரி மாதம் 1ம் தேதியான நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதோடு வார இறுதி தினங்களில் முழுமையான ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு ரத்து என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

இதனடிப்படையில் பொதுமக்கள் தலைநகர் சென்னையில் இருக்கின்ற கடற்கரைகளுக்கு நாளை முதல் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆனாலும் கடற்கரைகளுக்கு செல்பவருக்கு சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல், போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே பொதுமக்கள் அதனை முறையாக பின்பற்றினால் மட்டுமே நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க இயலும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version