தடையை மீறிய நடிகர் நடிகை! உடனடியாக வழக்கு போட்ட காவல்துறை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் குறைந்து வந்தாலும், ஊரடங்கு, லாக்டவுன் விதிகளை பல்வேறு மாநிலங்கள் மாற்றவில்லை. இன்னமும், கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடும் உச்சத்தை தொட்டு தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும், கட்டுப்பாடுகளை முழுவதும் நீக்காத அம்மாநில அரசு, மூன்றாம் அலை வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பகல் 2 மணிக்கு மேல் யாராவது வெளியே வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடையை மீறி வெளியே வருவோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தடையை மீறி வெளியே சுற்றித் திரிந்த நடிகர் நடிகைகள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப், நடிகை திஷா பதனி உள்ளிட்டோர் மதியம் 2 மணிக்கு மேல் வெளியே சுற்றித் திரிந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் என்றால், அவர்களுக்கு கொரோனா வராதா? ஒருவேலை அவர்களுக்கு வந்து ஏதேனும் நேர்ந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என காவல்துறையினர் முணுமுணுக்கின்றனர். உயிர் என்பது அனைவருக்கும் ஒன்று தான். அதனை காப்பாற்றவே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி மற்றவர்களுக்கு தொற்று பரவலை ஏற்படுத்தும் வகையில் வெளியே சுற்றினால், கட்டாயம் சட்டம் தன் கடைமையை செய்யும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.