டெல்லியின் கிராரி என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் உள்ளது இதில் மொத்தம் 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் எழுவதற்குள் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் கட்டிடம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த கொடூர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 8ம் தேதி டெல்லியின் அனஜ் மண்டி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.