முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!
சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இதனைத்தொடர்து அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு ,ஆத்தூர் ,கெங்கவல்லி ,ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம் செய்கின்றார்.
அதேபோல் இன்று தம்பம்பட்டி கெங்கவல்லியில் போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.இதனால் தம்பம்பட்டி பேருந்து நிலையம் அருகே மேடைகள் அமைக்கபட்டிருந்தன.இதனையடுத்து ஈச்சர் லாரியில் பெரிய ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டது.இந்த வாகனம் நேற்றிரவு 8 மணியளவில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனையடுத்து அருகிலிருந்த வாகனங்களை உடனடியாக அகற்றினர்.அதன் பின் மக்கள் அனைவரும் சேர்ந்து அத்தீயை அணைக்க முற்பட்டனர்.ஆனால் அரை மணி நேரத்திற்குள்ளையே அத்தீயானது வண்டி முழுவதும் பரவி எரித்து உருத்தெரியாமல் போனது.இதனைத்தொடர்ந்து அவ்வூர் மக்கள் பிரச்சாரம் ஆரம்பிக்கும் முன்னே இவ்வாறு நடந்ததை பெரும் அபசகுணமாக பேசி வருகின்றனர்.