இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை இந்த வருடம் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக தற்பொழுது இருந்து கொண்டாடப்பட்ட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சீன பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் இரவு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதை ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப அதன் வரைமுறைகள் மாற்றம் அடையும். இந்நிலையில் டெல்லியில் சமீப காலமாகவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. அதனால் பட்டாசு வெடிக்க அம் மாநில அரசு தடை விதித்துள்ளனர். டெல்லி வாசிகள் யாரேனும் பட்டாசு வெடித்தாலோ அல்லது கடைகளில் இருந்து பட்டாசு வாங்கினாலும் அவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
அது மட்டும் இன்றி 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கள்ளச் சந்தையில் பட்டாசு விற்று வந்தாலோ அல்லது அது வாங்கி மறைத்து வருபவர்களுக்கும் ஐந்தாரும் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் உண்டு என தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவின் அடிப்படையில் 16-ம் தேதி வரை 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் மூலம் 2917 கிலோ பட்டாசுகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.