இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கொரோனா தொற்றமானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையில் இருந்து மக்களின் மீண்டு வந்தது எடுத்து அடுத்த ஓரிரு மாதங்களிலேயே இரண்டாவது அலையும் ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது அலையில் தான் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்தனர். லட்சக்கணக்கில் உயிர்களை இறக்கவும் நேரிட்டது.வசதிகள் இன்றியும், தடுப்பூசி அமலில் வராத காரணத்தினாலும் இம்மாதிரியான இழப்புகளை சந்திக்க நேரிட்டது. தற்போது இரண்டாவது அலை முடிவுக்கு வந்து மூன்றாவது அலையின் தாக்கத்தின் தொடக்கத்தில் உள்ளோம். இந்நிலையில் மக்கள் அனைவரும் மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ளுமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்துவது நாள் மட்டும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாது.பொது இடங்களில் கூட்டம் கூடாத வகையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மேலும் தனிமனித இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும்.அந்த வகையில் தற்பொழுது தீபாவளி, கிறிஸ்துமஸ்,புத்தாண்டு போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளது. இந்த பண்டிகையின் போது மக்கள் பட்டாசுகள் வாங்கி,வெடித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். இவ்வாறு பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடுவர். அதனாலும் புகை மாசுபாடு ஏற்படும்.அவ்வாறு காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி முழுவதும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பட்டாசு வாங்கவும் விற்கவும்,வெடிக்கவும் தடை விதித்துள்ளனர்.
அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை தடை விதித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டாசுகள் வெடிப்பதால் வரும் புகையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிகம் மேலும் அதிகளவு பாதிக்கப்பட நேரிடும் என்பதாலும்,தற்பொழுது கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்பதாலும் பட்டாசுகள் விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.