Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !

#image_title

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு ! 
மும்பையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விற்பனை நிலையத்தை  அந்நிறுவனத் தலைவர் டிம் குக்.
அவர்கள் நுழைவு வாயிலை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.இவ்விற்பனை நிலையத்தில் முதல் ஐபோனை வாங்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் ஸ்டோரின் கான்செப்ட் நிச்சயமாக இந்தியாவிலேயே முதன்மையானதாக இருக்கும்.
இந்த ஆப்பிள் விற்பனையகம் இந்தியாவில் வருவதால்
 ஏற்படும் பயன்கள் குறித்து சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர்,  அதனை இங்கு பார்க்கலாம்.
ஆப்பிள் சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, ஆப்பிள் சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
20,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஆப்பிள் ஸ்டோரில், சுமார் 20க்கு மேற்பட்ட மொழிகளை பேசக்கூடிய 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஸ்டோரில் வேலை செய்கின்றனர். ஐபோன், ஐபேட், மேக், ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, ஹெட்போன்ஸ் என பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகள் இந்த ஸ்டோரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்டோருக்காக ஆப்பிள் நிறுவனம் 11 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மாதம் இந்த ஆப்பிள் ஸ்டோருக்காக 42 லட்சம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் என்றும், ஸ்டோர் வருவாயில் 2% தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லியில் சாகேத் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் சாகேத் (Apple Saket) ஸ்டோரை டிம் குக் திறந்து வைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Exit mobile version