Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவர்களின் அலட்சியத்தால் பீதியில் பொதுமக்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நோய் தடுப்பூசி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி கோவாக்சினும் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

அங்கே சித்தார்த் நகர் மாவட்டத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி நடந்துவருகின்றது. சென்ற மாதம் 20ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற 20 நபருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கடந்த 14ஆம் தேதி அந்த மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் கோவாக்சின் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக தகவல் தெரியவந்ததும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு இருவேறு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதன் காரணமாகவே அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக, எந்த விதமான பக்க விளைவு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருவதாகவும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவ அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போது இது முழுக்க முழுக்க கவனக்குறைவு காரணமாக, நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். கவனக்குறைவாக செயல்பட்டது யார் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விசாரணை நடந்து வருவதாகவும், தெரிவித்திருக்கிறார். அதோடு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை நேரில் சந்தித்து பேசி இருப்பதாகவும், அவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Exit mobile version