Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“முதல் அடி மாநாடு!! அடுத்த அடி ஆட்சி பீடம்!” – தவெக மாநாட்டை விமர்சித்த தொல் திருமாவளவன்!!

தமிகழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு 27-10-2024 அன்று விழுப்புர மாவட்டம் விக்கிரவாண்டி, ’வி’ சாலையில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்கள் பல லட்ச தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் கொள்கைகள், அரசியல் எதிரி, என பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.

இவரது பேச்சுக்கும் கட்சி கொள்கைக்கு, ஆதரவு, எதிர்ப்பு என பல கருத்துக்களை தெரிவித்தார்கள் அரசியல் தலைவர்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை “ தவெக மாநாடு- ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது! என்ற தலைப்பை கொண்டு இருக்கிறது.

“முதல் அடி மாநாடு!. அடுத்த அடி ஆட்சிப் பீடம்!” என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும், அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார்.

மேலும், ஆக்கப்பூர்வமான, புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையில் இறுதியாக ஒட்டுமொத்ததில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்த மாநாடு படப்பிடிப்பை போல நடந்தேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version