சகாயம் தலைமையில் கூடும் இளைஞர்கள் – மதுரையில் நடக்கப் போகிறதா முதல் கூட்டம்?
கடந்த சில நாட்களாக தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள விடயம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தில் நடைபெற்ற முறைகேடுகள்.இது போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் இலட்சக்கணக்கான இளைஞர்களிடையே மிகுந்த மனவேதனையை உண்டாக்கி இருந்தது.
.
எனினும் முறைகேடான தேர்வர்களை மட்டும் நீக்கி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்றைய தினம் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களை முதல்நாள் கலந்தாய்விற்கு அழைத்து பணிநியமன ஆணை வழங்கி உள்ளது.
கடந்தமாதம் குரூப்2a மற்றும் குரூப் 2 OT (oral test) ஆகிய இரு தேர்வுகளும் ஒருங்கினைக்கப் பட்டதாகவும், முதல்நிலை மற்றும் முதன்மை என இரு நிலைகளில் தேர்வு நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.முதல்நிலை தேர்வில் இருந்த பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டு முழுவதும் பொது அறிவு கேள்விகள் மட்டுமே இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது குரூப்-4 தேர்வுக்கும் முதன்மை தேர்வு நடைபெரும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் தேர்வர்களை பரபரப்பான சூழ்நிலையிலேயே வைத்துள்ளது.தேர்வர்கள் ஒட்டுமொத்தமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒரு குழுவாக செயல்பட நினைத்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை.
இதனால் போட்டித்தேர்வு மையங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்வர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் திருமண மணடபத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி திரு.சகாயம் IAS அவர்கள் தலைமையில் வருகின்ற ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் நடைபெருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பெரும் திரளான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.