முதல்வரின் டெல்லி பயணம் நோக்கம் என்ன? உண்மையான காரணம் இதோ!

0
129

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டிருக்கின்றன திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பதவியேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதே நேரம் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கின்றார். அப்போது மாநில அரசின் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி அதற்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதியை பெற முயற்சிப்பார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் சார்பாக மதுரை மாநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. ஆனால் அந்தப் பணி இதுவரையில் தொடங்கப்படாமல் இருக்கிறது எனவே அந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் இருந்தாலும் தமிழக முதல்வரை பொறுத்தவரையில் எப்போதும் பாஜக விற்கும் திமுகவிற்கும் ஏழரை பொருத்தம்தான் எப்பொழுது பார்த்தாலும் பாஜகவை ஏதாவது குறைகூறிக் கொண்டே இருக்கும் திமுக.அதேநேரம் திமுகவிற்கு சற்றும் சளைத்ததல்ல பாரதிய ஜனதா கட்சி அந்த கட்சியும் பரஸ்பரம் திமுகவை குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அது ஒரு டெல்லியில் ஏப்ரல் மாதம் 2ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கவிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து நாளை மாலை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்டோரை முதலமைச்சரை சந்தித்துப் பேசுகிறார். ஏப்ரல் மாதம் 1ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார். ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.