Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடங்கியது 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றியடைந்து ஆட்சியை பிடித்தது தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கின்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்ள இருக்கிறார்கள்.

சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றியடைந்த அதற்கான சான்றிதழை எடுத்து வரவேண்டும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கிறது சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி மூலமாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் சட்டசபை உறுப்பினர் எல்லோரும் வரிசையாக ஒவ்வொருவராக பதவி ஏற்பார்கள் என சொல்லப்படுகிறது.

முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறான சுழலில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடபெற இருக்கிறது.

Exit mobile version