Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினை உலுக்கும் கொரோனா! திமுகவினர் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் எடப்பாடியிலே ஆரம்பித்து தென்மாவட்டங்கள் வரை ஸ்டாலின் நடந்த கிராமசபை கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டதற்கு பின்னணியில் கொரோனா பயம் இருப்பதாக தெரிகிறது.

சில தினங்களுக்கு முன் சேலம் மாவட்டம் எடப்பாடியிலே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்குபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த கூட்டமானது ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் காலையில் இருந்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு அறிவித்திருக்கின்றது. ஸ்டாலின் சென்னையிலிருந்து சேலத்திற்கு கூட வரவில்லை அவ்வாறு இருக்கும் நிலையில் , மழை காரணம் என்று தெரிவித்து கிராம சபை கூட்டத்தை திமுக ரத்து செய்தது ஒரு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் மாதம் முழுவதுமே திட்டமிடப்பட்டிருந்த கிராமசபை கூட்டங்கள் அனைத்தும் திமுகவால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கிராமசபை கூட்டங்களில் தொடர்ச்சியாக ஆளும் தரப்பினர் பிரச்சனையை செய்யத் திட்டமிட்டு இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று திமுக தரப்பில் தகவல்கள் கசிந்திருக்கின்றன. அதோடு கிராமசபை கூட்டங்கள் நடத்துவதை குறைத்துக்கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை போல பிரச்சார வாகனத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. இதற்காகவே அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய வாகனம் ஒன்றை திமுக தரப்பு தயார் செய்து ஈசிஆர் சாலையில் சோதனை ஓட்டம் நடத்த இருப்பதாகவும் கூட, தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் இரண்டு மூன்று தினங்களாக ஸ்டாலின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. காணொளி மூலமாகவே ஒரு சில நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்தே கிராமசபை கூட்டங்களை திமுக தலைமையை ரத்து செய்திருக்கிறது. இதற்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் ஓட்டுநருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் தான் என்று சொல்கிறார்கள். இதற்கு முன்னதாகவே சுமார் இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் தினேஷ் கொரோனாவால் பாதிப்படைந்தார். அப்போவே ஸ்டாலின் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் அப்பொழுதும் ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ் என்று தான் வந்திருக்கிறது. இந்தநிலையிலே ஓட்டுனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஸ்டாலினும் கொரொனா பரிசோதனை எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் அதனுடைய முடிவு இரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாலின் நிர்வாகிகள் யாரையும் நேற்று முதல் சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது முன்னரே கொடுத்திருந்த அனைத்து அப்பாயின்மென்ட்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். இவையெல்லாம் வைத்து ஸ்டாலினுக்கும் கொரோனா என ஒரு சிலர் தகவல்களை கசியவிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதனை திமுக தலைமை கழகம் மறுத்திருக்கிறது தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனையில் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும், அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் விரைவாக அறிவிக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version