இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்!
கரோனா தொற்றானது கடந்த ஓராண்டுகளாக மக்களுடன் ஒன்றினைந்து வருகிறது.மக்களை அத்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு வர அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் வெளியே செல்லும் போது தனிமனித இடைவெளி கடைபிடிக்குமாறும்,முக்ககவசம் அணிந்தும் இருக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி உள்ளனர்.
அதேபோல தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடும் போடப்பட்டுள்ளது.அந்தவகையில் முதல் மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலையின் வீரியம் அதிகாமாக காணப்படும் என மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதனால் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தொற்று அதிகம் பரவும் இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் புதுச்சேரி மற்றும் கேரளாவில் அதிகளவு தொற்று பரவி வருவதால் ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வார இறுதி நாட்களில் கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல பொது இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியாவது செலுத்திருக்க வேண்டுமென்று கடுமையான கட்டுப்பாடுகளை கேரளா அரசு அமல்படுத்தியுள்ளது.அதேபோல ஓர் மாதம் காலமாக புதுச்சேரியில் தொற்று அதிகமாக காணப்பட்டதால் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டடிருந்தது.தற்போது புதுச்சேரியில் தொற்று குறைந்து காணப்படுவதால் மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சில திரையரங்குகள் வெகு நாட்களாக கழித்து திறப்பதால் பலூன்கள் கட்டி வெகு சிறப்பாக காட்சி படுத்தியுள்ளனர்.அதேபோல 50 சதவீதம் இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த படியும் புதுச்சேரி அரசாங்கம் கூறியுள்ளது.சினிமா ரசிகர்கள் இன்று திரையரங்கு திறந்ததையடுத்து பெருமளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மீண்டும் கொரோனா தொற்று அதிகமானால் பழைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.அதனால் மக்கள் வெளியே செல்லும் போது தங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும்.