ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் போடப்பட்டது தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், ஊரடங்கில் அளிக்கப்பட தசலர்வுகள் அடிப்படையில் சென்ற 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கினர், அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்த சூழ்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இதுவரையில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனவே நேற்று கல்லூரி கல்வி இயக்குனர் சி. பூரணச்சந்திரன் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள் அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அந்த சுற்றறிக்கையில், அனைத்து கல்லூரிகளிலும் இளநிலை 2 ,3 உள்ளிட்ட ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நரசிங் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2021 நாற்றமும் 2022 ஆம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் தெரிவித்திருக்கிறார். புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி வழங்குவதற்கு கல்லூரி முதல்வர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்களுடைய மண்டலத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்டுபிடித்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தகுதியான அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தியதோடு கல்லூரி வளாகங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும் என்பதையும், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற படுவதையும் கல்லூரி முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.