Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதில் தமிழக அரசு தான் பெஸ்ட்! மற்ற மாநிலங்கள் வேஸ்ட் முதல்வரை நெகிழவைத்த மாணவர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 10 நாட்களை கடந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி பத்திரமாக மீட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது ஆகவே உக்ரைனிலிருந்து பலர் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தநிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்றார். தூத்துக்குடி பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்த அவர் கடந்த மழை வெள்ளத்தின் போது பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தபோது கோவில்பட்டியில் செய்தித் தாளை வாங்கிப் படித்தார். அதில் உக்ரைனிலிருந்து திருநெல்வேலி திரும்பிய மாணவ, மாணவிகள், சொந்த ஊர் திரும்ப சிறப்பான ஏற்பாடு செய்ததற்காக தனது நன்றி தெரிவித்த செய்தியை பார்த்திருக்கிறார்.

உடனடியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை திருநெல்வேலி வரும்போது சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

அதனடிப்படையில், நேற்று மாலை மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்திலிருக்கின்ற மாணவி நிவேதிதா வீட்டில் வைத்து உக்ரைனிலிருந்து திரும்பிய மற்ற மாணவிகள் திவ்யபாரதி, ஹரிணி, மாணவன், நவநீத ஸ்ரீராம், உள்ளிட்டோரை முதலமைச்சர் சந்தித்து உரையாற்றினார்.

அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் பெயர் மற்றும் ஊர் உள்ளிட்ட விவரங்களை தனித்தனியே கேட்டறிந்த முதலமைச்சர் உக்ரைனில் நடைபெற்ற போருக்கிடையே தமிழக மாணவ, மாணவிகள் எல்லையை பாதுகாப்பாக கடந்தது தொடர்பாகவும் உணவு தேவையை எவ்வாறு சமாளித்தீர்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மாணவ-மாணவிகள், 2 நாட்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் உணவு வழங்கப்படும் இடத்தை வாட்ஸ்அப் மூலமாக தெரிந்து கொண்டு அங்கே சென்றதாகவும் தெரிவித்தார்கள்.

அதோடு எல்லையை கடந்த பிறகு தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடு தாங்கள் நாடு திரும்ப இது பெரிய உதவியாக இருந்தது என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள் இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றியும் தெரிவித்திருக்கிறார்கள் மாணவ-மாணவிகள்.

அப்போது மாணவர் நவநீத ஸ்ரீராம் எங்களுடன் மும்பை மாணவர்களும் வருகை தந்தார்கள் அவர்கள் தமிழக அரசுதான் மாணவர்களை மீட்பதில் சிறப்பான ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார்கள். தமிழக அரசை போல எந்த மாநில அரசும் மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவ, மாணவிகளிடம், உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பினார் அதற்கு அவர்களும் நாங்கள் தமிழ்நாட்டிலேயே படிப்பைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அதுகுறித்து தான் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் அருகிலிருந்த அதிகாரிகளிடமும் இது தொடர்பான விவரங்களை கேட்டு உடனடியாக தெரிவித்தார்.

அதன்பிறகு மாணவ-மாணவிகள் அவர்களுடைய பெற்றோரையும் அழைத்து தன் அருகே நிற்க வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அடுத்து அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மதுரை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Exit mobile version