Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமரின் வருகையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

#image_title

பிரதமரின் வருகையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

கல்பாக்கம் அனுமின் திட்டம், நந்தனம் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்சிகளில் கலந்துக் கொள்ள இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

புதிய மின் திட்டத்தை இன்று மூன்று மணியளவில் தொடங்கி வைக்க கல்பாக்கம் அனுமின் நிலையதிற்கு பிரதமர் வரவுள்ளதால் மாமல்லபுரம், கொக்கிலிமேடு,மெய்யூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட பத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

பிரதமரின் வருகையோட்டி சென்னை விமான நிலையம், நந்தனத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.இதனையோட்டி சென்னை முழுவதும் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version