கோவில் வழிபாட்டு அனுமதியுடன் அமல்படுத்தப்படும் 5வது ஊரடங்கு?

0
104

கடந்த மார்ச் 23ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்காவது கட்டமாக வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

நாளை ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவுடன் விவாதித்து வருகிறது.

முதல் ஒரு மாதத்தில் குறைந்த அளவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உச்சம் பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியாவின் மெட்ரோ எனப்படும் பெருநகரங்களில் கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. மாநிலங்கள் அளவில் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்தந்த மாநில அரசே ஊரடங்கை தளர்த்தவே நீட்டிக்கவோ மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், 13 டெல்லி, மும்பை, புனே, தானே, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஐதராபாத், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள எந்த விதிகளையும் தளர்த்தக்கூடாது என்று மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5ம் கட்ட ஊரடங்கில் கோயில்களில் வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை 5ம் கட்ட ஊரடங்கிலும் நீட்டிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.